நட்டு நீங்க வேறலெவல்!! பரிசு வழங்கிய கார் நிறுவனத்துக்கு நடராஜன் திருப்பி கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் என்ன தெரியுமா..?

நட்டு நீங்க வேறலெவல்!! பரிசு வழங்கிய கார் நிறுவனத்துக்கு நடராஜன் திருப்பி கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் என்ன தெரியுமா..?


Natarajan given his signed t shirt to Mahindra car company

மஹிந்திரா நிறுவனம் தனக்கு கார் பரிசாக கொடுத்ததற்கு, தனது பங்கிற்பு மஹிந்திரா நிறுவனத்துக்கு ஒரு பரிசு கொடுத்துள்ளார் நடராஜன்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் போட்டி மூலம் உலகளவில் கவனம் பெற்றார் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன். இதன் பலனாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சென்ற நடராஜன், மூத்த வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதை அடுத்து மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடி தனது திறமையை நிரூபித்தார்.

natarajan

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய வீரர்களான நடராஜன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சுப்மான் கில், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த மகேந்திரா சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது அனைவர்க்கும் மஹிந்திரா தார் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனக்கு பரிசாக வழங்கப்பட்ட காரை பெற்றுக்கொண்ட நடராஜன், அந்த காரை தனது பயிற்சியாளரும், தன்னை ஊக்குவித்தவருமான ஜெயப்ரகாஷுக்கு பரிசாக வழங்கி அழகு பார்த்துள்ளார்.

natarajan

அதேபோல், தனக்கு கார் பரிசாக வழங்கிய மஹிந்திரா நிறுவனத்திற்கு தனது நன்றிக்கடனை செலுத்தும் விதமாக, "தனது கையெழுத்து பதித்த டெஸ்ட் டி-சர்ட்டை அந்நிறுவனத்துக்கு நடராஜன் பரிசாக வழங்கியுள்ளார்". நடராஜனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.