விளையாட்டு

தனக்கு பரிசாக வந்த காரை நடராஜன் என்ன செய்தார் தெரியுமா..? நல்ல மனசு சார் நம்ம நடராஜனுக்கு..!!

Summary:

தனியார் நிறுவனம் தனக்கு பரிசாக வழங்கிய காரை தனது பயிற்சியாளருக்கு பரிசாக கொடுத்துள்ளார் நட

தனியார் நிறுவனம் தனக்கு பரிசாக வழங்கிய காரை தனது பயிற்சியாளருக்கு பரிசாக கொடுத்துள்ளார் நடராஜன்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் தொடர் மூலம் பிரபலமானவர் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபில் போட்டிகளில் மாஸ் காட்டி வந்த இவர் ஐபில் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக சென்றார்.

இந்நிலையில் மூத்த வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியநிலையில், நடராஜனுக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து. அதுவும் முதல் சுற்று பயணத்திலையே T20 , ஒருநாள், டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளில் விளையாடி அசத்தினார் நடராஜன்.

குறிப்பாக இந்திய அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற நடராஜன் முக்கிய காரணமாக இருந்தார். இதனால் முன்னாள் இந்திய அணி வீரர்கள் தொடங்கி உலக கிரிக்கெட் பிரபலங்கள் வரை நடராஜனை புகழ்ந்துதள்ளினர். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் நடராஜன் சிறப்பாக விளையாடி அசத்தியிருந்தார்.

இந்நினையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பமாக விளையாடிய இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் உருமையாளர் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் என்று கடந்த ஜனவரி அறிவித்திருந்தார்.

image

அதன்படி மேற்கூறிய அனைவர்க்கும் தற்போது மஹிந்திரா கார் ஒன்றை ஆனந்த் மஹிந்திரா பரிசாக வழங்கியுள்ளார். தனக்கு பரிசாக வழங்கப்பட்ட காரை பெற்றுக்கொண்ட நடராஜன், அந்த காரை தனது பயிற்சியாளரும், தன்னை ஊக்கப்படுத்தி வருபவருமான ஜெயபிரகாஷுக்கு பரிசளித்து நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார்.

நடராஜனின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement