தமிழகம் விளையாட்டு

கணிக்க முடியாத தருணம்.! மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும், நடராஜன் வீட்டில் நடந்த கொண்டாட்டம்.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

Summary:

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதனையடுத்து, 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற நடராஜன் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி காயம் காரணமாக வெளியேறினார்.

அதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது வீடு திரும்பியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின் போதே நடராஜனுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் தொடர்ந்து அப்படியே ஆஸ்திரேலியா சென்று 2 மாதகால பயணம் முடிந்துதான் ஊர் திரும்பி தன் செல்ல மகளை அவரால் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், நடராஜன் மனைவியுடன் சேர்ந்து மகள் ஹன்விகாவின் 6 மாத கால பிறந்த நாளை புகைப்படத்துடன் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து நடராஜன் அவரது ட்விட்டர் பதிவில், "ஹன்விகா எங்கள் சின்ன தேவதை, அவள் பிறந்த போது நான் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியாவில் இருந்தேன். இன்றோடு அவளுக்கு 6 மாதம் காலம் ஆகிறது. வாழ்க்கை கணிக்க முடியாது. இந்த தருணம் கணிக்க முடியாதது. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது விலைமதிப்பற்றது" என பதிவிட்டுள்ளார். 

அவர் பகிர்ந்த புகைப்படத்தில் நடராஜன், அவரது மனைவி, இவர்களின் மகள் ஹன்விகா ஆகியோர் ஒரே கலரில் ஆடை அணிந்திருந்தனர். மேலும் நடராஜனின் டீ சர்ட்டில் "ஹன்விகாவின் அப்பா" எனவும், நடராஜனின் மனைவி டீ சர்ட்டில் "ஹன்விகாவின் அம்மா" எனவும் எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement