புதியதொரு பரிமாணத்தில் திருப்புவேன்!! முரளி விஜய் பேட்டி !!

புதியதொரு பரிமாணத்தில் திருப்புவேன்!! முரளி விஜய் பேட்டி !!


murali-vijay-i-will-come-back-to-indian-team

புதியதொரு பரிமாணத்தில் திருப்புவேன்!! முரளி விஜய் பேட்டி !!

இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

indian cricket

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர், தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த டெஸ்டில் சதமடித்து மிரட்டிய இவர், இங்கிலாந்தில் நடக்கும் தொடரின் முதல் இரண்டு டெஸ்டில் சரியான பெட்டிங் செய்யவில்லை. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன் மட்டுமே எடுத்திருந்த அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சி லும் டக்-அவுட் ஆனார்.

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன்; முரளி விஜய் நம்பிக்கை

இதையடுத்து இந்தியா திரும்பிய முரளி விஜய், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அப்போது, முரளி விஜய் கூறும்போது, ‘விரை வில் அணிக்கு மீண்டும் திரும்புவேன். அணியில் இருந்து நான் நீக்கப்படுவது இது முதன் முறையல்ல. நான் நேர்மறையானவன். சில விஷயங் களில் முன்னேற வேண்டியிருக்கிறது. அதை சரி செய்துவிட்டு அதிக ரன்கள் குவிப்பேன். அதற்கு முன், இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்’ என்றார்.

முரளி விஜய்-க்கு 34 வயது ஆகிறது. வயதுதான் பிரச்னையா என்று கேட்டபோது, ‘வயதை ஒரு நம்பராகத்தான் நம்புகிறேன். அதனால் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவேன். இந்த தொடரில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களின் திட்டம் சரியாக வேலை செய்தது’ என்றார்.