விளையாட்டு

தல தோனி தனது மகளுடன் சேர்ந்து அவர்கள் வீட்டு செல்ல பிராணிக்கு கேட்ச் பிடிக்க கற்றுக்கொடுக்கும் வைரல் வீடியோ!

Summary:

Msd and his daughter train to their dog

தனது செல்ல பிராணி நாய்க்கு பந்தை எப்படி கேட்ச் பிடிக்க வேண்டும் என டோனி தனது மகள் ஸிவா உடன் சேர்ந்து கற்றுக்கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதே ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளது. 

பல வீரர்களும் சமூக வலைத்தளங்களில் உரையாடி வந்த நிலையில் தோனி குறித்து தான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி வந்தது. இந்தநிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பதிலளிக்கும் விதமாக தோனி குறித்த வீடீயோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


சிஎஸ்கே நிர்வாகம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், டோனி தனது பண்ணை வீட்டில் பொழுதை கழிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் தல தோனி தனது செல்ல மகள் ஸிவாவுடன் சேர்ந்து செல்ல பிராணிக்கு பந்தை எப்படி கேட்ச் செய்வது என்பதை இருவரும் கற்றுக்கொடுக்கின்றனர். இந்த வீடியோ தோனியின் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது. தோனியின் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement