விளையாட்டு

வித்தியாசமான தோற்றத்தில் தல தோணி! இணையத்தில் வைரலாகும் புது லுக் புகைப்படம்.

Summary:

MS Dhoni spotted in new look photo goes viral

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் தோணி எப்போது ஓய்வை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தோனியின் ஓய்வு குறித்து பேசியா BCCI அதிகாரிகள் தோணி ஓய்வு பெறுவது அவரது விருப்பம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஆட்டத்தில் தோணி விளையாடுவாரா மாட்டாரா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தான் இந்திய ஆர்மிக்கு செல்ல இருப்பதாகவும், அதனால் தனக்கு இரண்டு மாதம் ஓய்வு வேண்டும் எனவும் தோணி BCCI க்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்திய ஆர்மியில் கவுரவ பதவியில் இருக்கும் தோணி ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் தனது பயிற்சி காலம் முடிந்து தோணி ஆர்மியில் இருந்து திரும்பியுள்ளார். ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்த தோணி தலையில் கருப்பு துணி அணிந்து வித்தியாசமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement