நேற்றைய ஆட்டத்தின் மூலம் புதிய சாதனை படைத்த தல தோனி! என்ன சாதனை தெரியுமா?



MS Dhoni New record in yesterday match


ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறு விறுப்பாக நடந்துவருகிறது. 39 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

நேற்று நடந்த 39 வது போட்டியில் பெங்களூர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

MS Dhoni

இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் கடைசி வரை போராடிய டோனி 48 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்தார்.

நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார். நேற்றைய போட்டியில் 7 சிக்சர்கள் விளாசியதுடன் சேர்த்து மொத்தம் 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.