
2021 ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதற்காவும் சென்னை வந்த தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் 2021 ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்களை எடுப்பதற்கான ஏலம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல்வேறு அணிகளுக்கு பல முன்னணி வீரர்கள் ஏலத்தில் விலைக்கு வாங்கப்பட்டனர்.
இந்நிலையில் இப்போட்டித் தொடரில் பயிற்சி செய்வதற்காக சிஎஸ்கே அணியின் தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கடந்தாண்டும் பயிற்சிக்காக சென்னை வந்த தோனி தன்னுடைய ஓய்வை சென்னையில் இருந்துதான் அறிவித்தார். சென்னை அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் தற்போது முக்கிய வீரர்கள் சென்னை அணியில் களமிறங்கவுள்ளதால் சென்னை அணி மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி வரும் 8ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி பயிற்சி ஆட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement