பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கடைசி டெஸ்ட் போட்டி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா!Most expected last test match against india vs england

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று துவங்கும் இந்த கடைசி டெஸ்ட் பேட்டி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடப்போகும் அடுத்த அணியினை தீர்மானிக்கப் போவது இந்த போட்டி தான்.

india vs england

புள்ளிப்பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருந்தாலும் நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்த கடைசி போட்டியில் நிச்சயம் தோற்றுவிட கூடாது.

இந்த போட்டியில் இந்தியா வென்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்திய அணி தொடரையும் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும். ஒருவேளை இங்கிலாந்து வென்றால் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.