வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
இதுக்கு பேர் தான் பிரதர் "கர்மா".. சோயிப் அக்தருக்கு வலுவான பதிலடி கொடுத்த முகமது ஷமி.!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்த இந்திய அணியை முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், முகமது ஷமியை குறிப்பிட்டு, அவர் அணியில் இடம் பெற தகுதியற்றவர் என்றும் அக்தர் விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பிறகு, சோயிப் அக்தர் மனமுடைந்த பதிவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இதற்க்கு முகமது ஷமி ட்விட்டரில் ஒரு வலுவான பதிலைக் கொடுத்துள்ளார்.
Sorry brother
— Mohammad Shami (@MdShami11) November 13, 2022
It’s call karma 💔💔💔 https://t.co/DpaIliRYkd
சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதயம் உடைந்துபோன எமோஜியை பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டுக்கு உடனடியாக பதிலளித்த முகமது ஷமி, "சாரி பிரதர் இதைத் தான் கர்மா என்று அழைப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார். அவரது பதில் ட்வீட் வைரலாகி வருகிறது.