தவான் மீண்டும் வரவேண்டும்! பிரதமர் மோடி அதிரடி!

தவான் மீண்டும் வரவேண்டும்! பிரதமர் மோடி அதிரடி!


modi talk about Dhawan


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியா அணியை வென்றது. அந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 117 ரன் எடுத்த  இந்திய அணியின் தொடக்க வீரர் தவானுக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த போட்டியில் தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மூன்று வாரத்திற்கு அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தவான் அடுத்த மூன்று வாரத்திற்கு எந்த போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தவானுக்கு ஏற்பட்ட காயம் குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகும் என்பதால், ஷிகர் தவான் உலகக்கோப்பை தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

போட்டியில் இருந்து விலகிய பின்னர் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இந்த உலகக் கோப்பையில் இனி ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்று கூறுவதை கஷ்டமாக உணர்கிறேன் என பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தவான் வெளியிட்ட வீடியோவிற்கு இந்திய பிரதமர் மோடி, புகழாரம் சூட்டியுள்ளார். மோடி வெளியிட்ட பதிவில், அன்புள்ள தவான், களம் உங்களை இழந்தது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நீங்கள் விரைவாக மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன், இதனால் நீங்கள் மீண்டும் களத்தில் இறங்கி தேசத்தின் அதிக வெற்றிகளுக்கு பங்களிக்க முடியும் என நம்புவதாக மோடி கூறியுள்ளார்.