கிரிக்கெட்டுக்காகவே வாழ்ந்தீர்கள்! ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி! அதற்கு ரெய்னா என்ன கூறியுள்ளார் தெரியுமா?

கிரிக்கெட்டுக்காகவே வாழ்ந்தீர்கள்! ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி! அதற்கு ரெய்னா என்ன கூறியுள்ளார் தெரியுமா?


modi appriciate to suresh raina

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று, சுதந்திர தினத்தில் அடுத்தடுத்து ஓய்வு அறிவித்தனர். இவர்களின் ஓய்வு அறிவிப்பும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தோனியை பாராட்டி கடிதம் எழுதினார். அதே போல் ரெய்னாவுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “நீங்கள் கிரிக்கெட்டுக்காகவே வாழ்ந்தீர்கள். அதையே உயிர்மூச்சாக கொண்டீர்கள். லக்னோவின் மைதானங்களிலும், முர்தாநகர் தெருக்களிலும் இருந்தே உங்களின் இளமைகால கிரிக்கெட் ஆர்வம் துவங்கிவிட்டது. மிகச்சிறந்த பயணமாக உங்களுக்கு கிரிக்கெட் வாழ்க்கை அமைந்திருக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் கடினமான முடிவை எடுத்துள்ளீர்கள்,அதை நான் ஓய்வு என்று சொல்லமாட்டேன்.

நீங்கள் இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவில் முன்னணிப்படுத்த முயன்றதற்கும் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் ” என்று கூறி நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தநிலையில்  மோடியின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்த ரெய்னா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், நாங்கள் ஆடும்போது நாட்டுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துகிறோம். இந்த நாட்டு மக்களின் அன்பு போல் சிறந்த பாராட்டு வேறொன்றும் இல்லை. அதிலும் பிரதமரே கூட அதை விடவும் அன்பு காட்டும்போது வேறேன்ன வேண்டும் என்று பிரதமருக்கு நன்றி தெரிவித்து ’உங்கள் பாராட்டை நன்றியுடன் ஏற்று கொள்கிறேன். ஜெய் ஹிந்த்’ என்று முடித்துள்ளார்.