விளையாட்டு

ரோஹித் ஷர்மாவை இந்திய அணியில் சேர்க்காததற்கு இதுதான் காரணமா.. முன்னாள் வீரர் கூறிய அதிரவைக்கும் தகவல்!

Summary:

ரோஹித் ஷர்மாவை இந்திய அணியில் சேர்க்காததற்கு என்ன காரணமாக இருக்கும் என இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வீரர் மைக்கேல் வாஹன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது.

இந்த அணி தேர்வில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து வந்த ரோஹித் சர்மா இடம்பெறாதது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. காயம் தான் காரணம் என கூறி வந்த நிலையில் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்கினார். இதனால் ரோஹித் ஷர்மாவின் நீக்கம் குறித்து மேலும் கேள்விகள் எழுந்துள்ளன.

Hitman' Rohit Sharma becomes 'Batman' in IPL 2020 - This is why

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் நீக்கம் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வீரர் மைக்கேல் வாஹன், ரோஹித் ஷர்மாவின் உடல் எடை தான் அவரை அணியில் இருந்து நீக்கியதற்கான காரணமாக இருக்கும் என கூறியுள்ளார். ரோஹித் ஷர்மாவின் உடல் எடை கூடி இருப்பது ஐபிஎல் போட்டிகளில் தெளிவாக தெரிகிறது.

கோலியை பொறுத்தவரை உடலை பிட்டாக வைத்திருப்பவர்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். உதாரணமாக உடல் எடையை காரணமாக கட்டி தான் ரிசப் பந்த் ஒருநாள் மற்றும் T20 அணிகளில் சேர்க்கப்படவில்லை. எனவே ரோஹித் ஷர்மாவை அணியில் சேர்க்காததற்கும் இது தான் காரணமாக இருக்கும் என வாஹன் கூறியுள்ளார்.


Advertisement