இந்திய அணியின் இந்த நிலைக்கு இவர்கள் இருவரும் ஒரு காரணம்; ஸ்லேட்டர், நெஹ்ரா யாரை சொன்னார்கள் தெரியுமா?

இந்திய அணியின் இந்த நிலைக்கு இவர்கள் இருவரும் ஒரு காரணம்; ஸ்லேட்டர், நெஹ்ரா யாரை சொன்னார்கள் தெரியுமா?



micheal-slater-says-good-understanding-between-virat-kohli-and-ravi-shastri

இந்திய அணி கேப்டன் விராட்கோலி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட்டணியால் பல சாதனைகளை படைத்தது. இதன் காரணமாக ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிந்த பின்பும் 2021ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்வரை பிசிசிஐ பதவி நீட்டிப்பு செய்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டரும் இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஸ்லேட்டர் இருவரின் கூட்டணி அருமையாக உள்ளது. விராட் கோலியும், ரவி சாஸ்திரியும் தங்களுக்குள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிக்கொள்வார்கள். அதனால்தான், இந்திய அணி ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

virat kholi

தொடர்ந்து பேசிய ஆஷிஷ் நெஹ்ரா விராட் கோலி, ரவிசாஸ்திரி இருவரும் இந்திய அணிக்குக் கிடைத்த சிறந்த பார்ட்னர்ஷிப். விராட் கோலியின் பேச்சுக்கு ரவி சாஸ்திரி மதிப்பளிப்பார். இருவருக்கும் நட்பு ரீதியிலான உறவு இருக்கிறது. ரவி சாஸ்திரி என்ன எதிர்பார்க்கிறார் என்பதை விராட் கோலியால் புரிந்துகொள்ள முடியும். 

வீரர்களை ஊக்கப்படுத்துவதில் ரவி சாஸ்திரி கைதேர்ந்தவர். அதுதான் அவரின் பலம். வீரர்கள் சோர்வாக இருந்தால் அவர்களின் அருகில் சென்று என்ன பிரச்சினை என்று கேட்டு, அதற்கேற்ப அறிவுரைகளை வழங்குவார். கைகளை இறுகப்பற்றிக் கொண்டு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பேசுவார் என்று கூறினார்.