நெருங்கிய நண்பருக்கே துரோகம்.. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனின் தொடரும் மன்மதலீலை!

நெருங்கிய நண்பருக்கே துரோகம்.. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனின் தொடரும் மன்மதலீலை!


Micheal Clarke's 4th girl friend

ரிக்கி பாண்டிங்கிற்க்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் மைக்கேல் கிளார்க். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2015ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்த மைக்கேல் கிளார்க் தனது சொந்த வாழ்க்கையில் இஷ்டம் போல் அடிக்கடி காதலிகளை மாற்றி உலாவருகிறார்.

முதல் முதலில் லாரா வொர்த்திங்டன் என்ற பெண்ணை காதலித்தார்‌ கிளார்க். திருமணம் வரை சென்ற இந்த உறவு ஒருசில மனக்கசப்பால் முறிந்தது. அதனைத் தொடர்ந்து கெயில் போட்லி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கிளார்க். இந்த உறவும் 7 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

Micheal clarke

அதன் பிறகு ஆடை வடிவமைப்பாளரான பிப் எட்வர்ட்ஸ் என்ற பெண்ணுடன் டேட்டிங் செய்துவந்த கிளார்க் தற்பொழுது நான்காவது துணையாக ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றி வருகிறார். அதுவும் தனது நெருங்கிய நண்பரான டிராவி பாக்கனின் மனைவியான ஜேட் யார்புரோக்.

தனது நெருங்கிய நண்பருக்கு இப்படி துரோகம் செய்துள்ள கிளார்க் தனது புது காதலியுடன் அடிக்கடி டேட்டிங் செய்வதுடன் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதுமாக தனது வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.