வயது 20 தான்.. ஆனால் தலைமைக்கு சரியானவர்.. இந்திய இளம் வீரர் குறித்து மெக்கலம் பெருமிதம்!McCullam talks about shubman gill

இந்தியாவில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சுப்மன் கில். 20 வயதேயான கில் இந்திய அணிக்காக இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை கில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுப்மன் கில்லின் திறமை குறித்து கொல்கத்தா அணியின் தற்போதைய பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான பிரன்டன் மெக்கலம் பெருமையாக பேசியுள்ளார்.

Shubman gill

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்போதைய நிலை குறித்து பேசிய அவர், அந்த அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிற்கு உறுதுணையாக இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், ரஸல், கம்மின்ஸ் போன்ற சீனியர் வீரர்கள் இருப்பர்.

இந்த தலைமை குழுவில் 20 வயதேயான சுப்மன் கில்லும் இணைய தகுதியானவராக உள்ளார். ஒரு நல்ல தலைவராக இருக்க அனுபவம் மட்டும் தகுதியில்லை. நல்ல தலைமை பண்புகள் அவசியம். அத்தகைய பண்பு சுப்மன் கில்லிடம் உள்ளது என கூறியுள்ளார்.