
Maxwell exit from Kings eleven Punjab for injury
ஐபில் போட்டிகள் அடுத்த மாதம் 29 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. போட்டி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் கோப்பையை வெல்ல அணைத்து அணிகளும் தீவிரமாக உள்ளன.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேறியிருப்பது அணி நிர்வாகம் உட்பட ரசிகர்களும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக ராஜஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
ஆர்ச்சரை அடுத்து, பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அணியில் இருந்து தற்காலிகமாக விளக்கியுள்ளார். காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் 8 வாரங்கள் வரை அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதனால், ஐபில் போட்டியின் தொடக்கத்தில் மேக்ஸ்வெல் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. பஞ்சாப் அணி சுமார் 10.5 கோடிகள் கொடுத்து மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement