விளையாட்டு

மீடியாவுக்கு பேட்டி கொடுக்கும்போது ப்ரோப்போஸ் செய்த கோச்.! ஓகே சொன்ன ஒலிம்பிக் வீராங்கனை.! வைரல் வீடியோ

Summary:

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு அவரத

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு அவரது பயிற்சியாளர் ப்ரோப்போஸ் செய்தநிலையில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார் அந்த வீராங்கனை.

2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் டோக்கியோ நகரில் இந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில், அர்ஜென்டினா நாட்டிற்காக வாள்வீச்சு போட்டியில் பங்கேற்றார் மரியா பெலன் பெரெஸ் மாரிஸ். 36 வயது வீராங்கனையான இவர், ஹங்கேரி நாட்டின் அன்னாவிடம் 12 - 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறினார். தோல்வியடைந்த சோகத்தில் இருந்த அவருக்கு பயிற்சியாளர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தோல்வியடைந்த பிறகு தனியார் ஊடகத்திற்கு வீராங்கனை மரியா பெலன் பெரெஸ் மாரிஸ் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவரது பயிற்சியாளர் Lucas Guillermo Saucedo, அவருக்கு பின்னால் நின்றபடி "திருமணம் செய்துகொள்வோமா?" என்று சிறிய பேப்பரில் எழுதி கேட்டுள்ளார். இதனை பார்த்த மாரிஸ் சம்மதம் சொல்லியுள்ளார். அது அந்த ஊடகத்தின் கேமராவில் பதிவாகியுள்ளது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 


Advertisement