BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஸ்டாலினை தெரியாதாம்; விஜய் தான் டார்லிங்காம் - நடிகர் விஜய்யை புகழ்ந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பார்க்கர்.!
பாரிஸ் நகரில் நடைபெற்ற 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில், துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கல பதக்கத்தை வென்று இந்திய அளவில் பெருமை சேர்த்தார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவடையும் நிகழ்ச்சியிலும், அவர் இந்திய தேசிய கொடிகளை ஏந்தி தனது அணிவகுப்பை நிறைவு செய்திருந்தார்.
வேலம்மாள் கல்வி நிறுவனம் பாராட்டு
வெற்றியுடன் தாயகம் திரும்பிய மனுவுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனு பார்க்கர், மாணவிகளிடம் சிறிது நேரம் உரையாடினார்.
விஜய் டார்லிங்
மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த மனு பார்க்கர், "எனக்கு தென்னிந்திய உணவுகளை மிகவும் பிடிக்கும். மகாபலிபுரம் குறித்து பெரிய அளவுக்கு எனக்கு தெரியாது எனினும், சில இடங்களில் அதனை கேள்விப்பட்டு இருக்கிறேன். செஸ் சாம்பியன் ப்ரக்யானந்தா பற்றி தெரியும் என கூறினார்.
அதன்பின் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து கேட்ட போது தெரியாது என்றவர், நடிகர் விஜய் குறித்து கேட்ட போது, ஆமாம் அவரை எனக்கு தெரியும். அவரை எனக்கு பிடிக்கும். He is a Darling" என கூறினார்.