
Malinga leaves ipl 2020 james pattinson replaces
செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் துவங்கவுள்ள ஐபிஎல் 2020 தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்கா விலகியுள்ளார். தன் குடும்பத்தினரை கவனித்துகொள்ள வேண்டும் என காரணம் கூறி இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
மலிங்காவிற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் தேர்வாகியுள்ளார். இவர் இந்த வாரத்தில் யூஏஇக்கு புறப்படுகிறார்.
2009 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மலிங்கா ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 122 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு இதுதான் முதல் ஐபிஎல் தொடர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கிய திருப்புமுனையாக விளங்கிய மலிங்காவின் இடத்தை பேட்டின்சன் பூர்த்தி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement