காயத்தால் அவதியுறும் கே.எல்.ராகுல்..!! அடுத்தடுத்த தோல்விகள்..!! சென்னையை சமாளிக்குமா லக்னோ..?!!

காயத்தால் அவதியுறும் கே.எல்.ராகுல்..!! அடுத்தடுத்த தோல்விகள்..!! சென்னையை சமாளிக்குமா லக்னோ..?!!



Lucknow Super Giants vs Chennai Super Kings in the 45th league match in Lucknow.

இன்று மாலை 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 45 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 43 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று மாலை 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 45 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 வெற்றி, 4 தோல்விகளுடன்  10 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தொடையில் தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறினார். அவரது காயம் முழுமையாக குணமடையாததால் இன்றைய போட்டியில் களம் இறங்குவது கடினம்.

இன்றைய போட்டியில் குருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். அந்த அணியின் பேட்டிங் வரிசையில் நிகோலஸ் பூரன், மார்க்ஸ் ஸ்டோனிஸ், கைல் மேயர்ஸ் வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக் நல்ல நிலையில் உள்ளனர். கே.எல்.ராகுலுக்கு பதிலாக குயின்டான் டி காக் இன்றைய போட்டியில் களமிறங்குவார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 9 போட்டிகளில் பங்கேற்று  5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் குறைந்தது 4 வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், அந்த அணி வெற்றிக்காக போராடும்.

சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் டெவன் கான்வே 414, ருதுராஜ் கெய்க்வாட் 354, ஷிவம் துபே 264, ரஹானே 224 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த தீபக் சஹர், பென் ஸ்டோக்ஸ், மகாலா காயத்தால் அவதிப்படும் நிலையில் பதிரானா, ஆகாஷ் சிங், துஷர் தேஷ்பாண்டே போன்ற இளம் வீரர்களை நம்பி அந்த அணி களமிறங்கும்.