விளையாட்டு லைப் ஸ்டைல்

இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் நடுவே இளம் காதலர்கள் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

Summary:

Lover proposing while India vs Pakistan match

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்துள்ளது. கடந்த வாரம் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

எதிரி அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். பல்வேறு பிரபலங்கள் போட்டி நடைபெறும் இடத்திற்கே சென்று போட்டியை கண்டுகளித்தனர். இந்த போட்டியில் பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் நடைபெற்றன.

Related image

அதில் ஒன்றுதான் இந்த சம்பவம். போட்டி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் மைதானத்தின் பெவிலியனில் அமர்ந்திருந்த தனது தோழியிடம் அவரது நண்பர் சற்றும் எதிர்பாராமல் தனது காதலை வெளிப்படுத்தினார். பின்னர் தனது கையில் இருந்த மோதிரத்தை அவருக்கு அணிவித்து காதலை ப்ரொபோஸ் செய்தார்.

இதனை சற்றும் எதிர்பார்த்த காதலி சந்தோஷத்தில் மிதக்க பின்னர் இருவரும் அழகாய் முத்தம் கொடுத்துக்கொண்ட காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி. 


Advertisement