தோனியின் வீட்டிற்கு முன் திடீரென குவிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள்... என்ன காரணம் தெரியுமா?

தோனியின் வீட்டிற்கு முன் திடீரென குவிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள்... என்ன காரணம் தெரியுமா?


Lot of police arrived in front of Dhoni house

13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று பலம் பொருந்திய அணியாக கருதப்பட்டு வந்த நிலையில் நடப்பு ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் படு தோல்வியை சந்தித்ததை அடுத்து ரசிகர் ஒருவர் போலியான ஐடியின் மூலம் அநாகரீகமாக தோனியின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

dhoni

இதனால் ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு தான் தோனியின் மனைவி மற்றும் மகள் வசித்து வருவதால் பாதுகாப்பு திவீரமாக்கப்பட்டுள்ளது.