இந்தியா விளையாட்டு

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிக்கும் இப்படியே வந்துடாதீங்க தோனி.! இலங்கை அணியின் குமார் சங்ககாரா அறிவுரை.!

Summary:

உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி பேட்டிங் பயிற்சி எடுங்கள் என்று தோனிக்கு சங்ககாரா அறிவுரை கூறியுள்ளார்.

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 49 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் தடவையாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துவந்து. இந்தநிலையில் நேற்று நடந்த  13 வது சீசன் T20 போட்டியின் 49 ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தியது. நேற்றைய ஆட்டத்திலும் தோனி சரியாக விளையாடவில்லை.

இந்தநிலையில், 2021-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு எந்தவிதமான பயிற்சியும் இல்லாமல் விளையாட வந்துவிட வேண்டாம். உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி பேட்டிங் பயிற்சி எடுங்கள் என்று சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா அறிவுரை கூறியுள்ளார். ஒரு வீரர் பார்மில் இல்லாததும், நல்ல பார்மில் இருப்பதும் சகஜமான ஒன்றுதான். எல்லா வீரர்களும் இந்த சூழலை எதிர்கொள்வார்கள். ஆனால் ஒரு சில வீரர்களின் செய்திதான் பெரிதாக பேசப்படும். ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement