விளையாட்டு

ஒற்றை கேள்வியால் செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த கோஹ்லி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

Summary:

kohli angry on interview after match

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டிகளை தவிர ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்தது. இது  இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆட்டம் இழந்து வெளியேறும்போது இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி  ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிட்டார். மேலும் வில்லியம்சன் வெளியேறும்போது வாயில் விரல் வைத்தும் அவரை வழியனுப்பி வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து ஒயிட் வாஷ்... நிதானம் இழந்த விராட் கோலி... செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு...!

இந்த நிலையில், போட்டிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் விராட் கோலி நிதானமிழந்து பதிலளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது செய்தியாளர் ஒருவர் விராட், களத்தில் நீங்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றி சொல்ல விரும்புவது என்ன? இந்திய கேப்டனாக களத்தில் நீங்கள் சிறந்த உதாரணமாக இருக்கவேண்டும் என நீங்கள் ஏன் நினைப்பதில்லை? என கேட்டுள்ளார். அதற்கு கோலி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அந்த செய்தியாளர் நான் கேள்வி கேட்டுள்ளேன் என கூற அதற்கு கோலி நான் உங்களிடம் பதில் கேட்கிறேன் என கூறியுள்ளார்.

அதற்கு அந்த செய்தியாளர் நீங்கள் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்பொழுது தொடர்ந்து பேசிய  கோலி கேள்விகளை கேட்பதற்கு முன், களத்தில் சரியாக என்ன நடந்தது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பாதி கேள்விகளுடன் நீங்கள் இங்கே வரக்கூடாது. மேலும், நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு இது சரியான இடமில்லை. மேலும் இதுகுறித்து போட்டி நடுவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. நன்றி என கோபத்துடன் கூறியுள்ளார். 


Advertisement