விளையாட்டு

நார்மல் சிக்ஸ்னா ஓகே! ஆனால் அந்த மாதிரி சிக்சருக்கு இனி எக்ஸ்ட்ரா ரன் கொடுக்கணும்! கே. எல் ராகுல் வேண்டுகோள்.!

Summary:

100 மீட்டர் தூரத்துக்கு மேல் சிக்ஸர் அடித்தால் இனி எக்ஸ்டரா ரன்கள் வழங்கவேண்டும் என பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கோரிக்கை வைத்துள்ளார்.

100 மீட்டர் தூரத்துக்கு மேல் சிக்ஸர் அடித்தால் இனி எக்ஸ்டரா ரன்கள் வழங்கவேண்டும் என பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த மாதம் தொடங்கிய ஐபில் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 30 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வீரர் க்ரிஷ் கெய்ல் முதல் முறையாக களமிறங்குகிறார்.

மேலும், பஞ்சாப் அணி இந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றிபெறவேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடிவருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கு முன்னதாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியும், பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலும் காணொலி விவாதத்தில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ராகுல் 100 மீட்டர் தாண்டி அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதல் ரன் வழங்கவேண்டும் என குறிப்பிட்டார். ராகுலின் இந்த கோரிக்கையை ஐபில் நிர்வாகம் ஏற்குமா? அடுத்த சீசனில் இதுபோன்ற மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement