விளையாட்டு

சூப்பர்மேன் போல் பறந்து கேட்ச் பிடித்த பொல்லார்ட்! வைரலாகும் வீடியோ இதோ!

Summary:

Kiran pollard super man catch video

கிரிக்கெட்டில் பல நேரங்களில் பலவிதமான கேட்சுகள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் வெஸ்டிண்டிஸ் வீரர் கிரண் பொல்லார்ட் பிடித்த கேட்ச் ஓன்று வைரலாகிவருகிறது. கனடாவில் குளோபல் T20 போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ஹாக்ஸ் மற்றும் டொரோண்டோ அணிகள் மோதின.

இதில் முதலில் பேட் செய்த ஹாக்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து. இதனை அடுத்து களமிறங்கிய டொரோண்டோ அணி 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் மழை குறிக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி ஹாக்ஸ் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் ஹாக்ஸ் ஆட்டத்தின்போது டொராண்டோ அணியின் சுழற்பந்து வீச்சாளர் க்ரீன் வீசிய பந்தை ஹாக்ஸ் அணியின் நட்சத்திர வீரர் க்ரிஷ் லின் நேர்திசையில் தூக்கி அடித்தார். அப்போது அங்கு பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த கிரண் பொல்லார்ட் அந்த பந்தை சூப்பர் மேன் போல் பறந்து பிடித்தார். இதோ அந்த வீடியோ. 


Advertisement