கொரோனா நிவாராண நிதிக்காக தங்கள் பொருட்களை ஏலம் விடும் கோலி - டிவில்லியர்ஸ் கூட்டணி!

கொரோனா நிவாராண நிதிக்காக தங்கள் பொருட்களை ஏலம் விடும் கோலி - டிவில்லியர்ஸ் கூட்டணி!


kholi-and-abd-reday-to-auction-their-kits-for-corono-re

கொரோனா நிவாரண நிதிக்காக ஐபிஎல் வரலாற்றின் சிறந்த ஆட்டத்தில் பயன்படுத்திய சர்ட், க்ளவுஸ் மற்றும் பேட்டுகளை ஏலம் விட கோலி மற்றும் டிவில்லியர்ஸ் முடிவு செய்துள்ளனர்.

2016 ஆம் ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடி 229 ரன்கள் எடுத்தனர். அந்த போட்டியில் இருவருமே சதம் விளாசினர். ஐபிஎல் வரலாற்றில் இந்த போட்டி அவர்கள் இருவருக்கும் மறக்க முடியாத ஆட்டம்.

Corono relief fund

இந்நிலையில் தற்போது லைவ் வீடியோ சாட்டில் விராட் கோலியுடன் பேசிய டிவில்லியர்ஸ் அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் நாம் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட்டு வரும் பணத்தை கொரோனாவால் கஷ்டப்படும் ஏழைகளுக்கு நிவாரணமாக கொடுக்கலாம் என யோசனை கூறினார். இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காத கோலி தன்னுடைய க்ளவுஸ் மற்றும் பேட்டினை தர ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த போட்டியில் டிவில்லியர்ஸ் அணிந்திருந்த டிசர்ட், இருவரின் க்ளவுஸ் மற்றும் பேட் போன்றவை விரைவில் bidorbuy இணையதளத்தில் ஏலத்திற்கு விடப்படவுள்ளது. இவர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.