சென்னை அணியில் முக்கிய மாற்றம்! நீக்கப்பட்ட வீரர் மீண்டும் அணியில் சேர்ப்பு! என்ன ஆக போகுதோ! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்.

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே ஷார்ஜாவில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


Kedar jathav rejoined in csk team against to dc

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே ஷார்ஜாவில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று நடைபெறும் போட்டியில் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் வலுவான அணியுடன் சென்னை அணி இன்று பலப்பரீட்சையில் இறங்குகிறது. மேலும் ஷார்ஜா மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக இருக்கும் என்பதால் சென்னை அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

csk

இந்நிலையில் இன்றைய போட்டியில் கேதர் ஜாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேதர் ஜாதவ் கடைசியாக விளையாடிய போட்டியில் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அடுத்த போட்டியில் ஜெகதீசன் சேர்க்கப்பட்டார்.

ஆனால் ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் கேதர் ஜாதவ், ஜெகதீசன் இருவரும் நீக்கப்பட்டனர். இந்நிலையில் இன்றைய ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்று ஜெகதீசன் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் கேதர் ஜாதவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.