"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
இந்திய கிரிக்கெட் வீராங்கனையிடம் காதலை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடிய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. கர்நாடக கிரிக்கெட் வீரர் அர்ஜுன் ஹொய்சாலாவை திருமணம் செய்யவுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, கொரோனா காலத்தில் தனது தாய் மற்றும் சகோதரி என இருவரையும் இழந்தார். இதனால், இவர் இந்திய அணியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவர், தனது நண்பரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான அர்ஜுன் ஹொய்சாலாவை திருமணம் செய்ய உள்ளார். இதுபற்றி, அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், வேதா கிருஷ்ணமூர்த்தியின் முன் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறார்.
பின்னர் அவருக்கு மோதிரம் அணிவிக்கிறார். இந்த புகைப்படங்களை வெளியிட்டு, தனது காதலை அவர் ஏற்று கொண்டார் என அர்ஜுன் தெரிவித்து உள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.