வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
இந்திய அணியில் இவார்தான் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.! இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஓப்பன் டாக்.!
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தநிலையில், இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதும். இந்நிலையில், இன்று இந்தியாவுடன் நடைபெறும் அரையிறுதி போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசுகையில், எங்களுக்கு இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என கருதுவதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங்கில் நிச்சயமாக சூர்ய குமார் யாதவ் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். ஏனென்றால் அவர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
உலகின் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஒரு விக்கெட்டை உருவாக்க ஒரு வாய்ப்பு போதும். அவர் அனைத்து ஷாட்டுகளையும் ஆடுகிறார். சூர்யகுமாரை மட்டும் நினைப்பது ஒரு குறையாக இருக்கலாம். இந்தியா மேலும் பல சிறப்பான வீரர்களை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.