2022 ஐபிஎல் தொடர்: புள்ளி பட்டியலில் டாப்புக்கு சென்ற கொல்கத்தா மற்றும் லக்னோ அணி.! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..

2022 ஐபிஎல் தொடர்: புள்ளி பட்டியலில் டாப்புக்கு சென்ற கொல்கத்தா மற்றும் லக்னோ அணி.! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..



ipl-rank-list-2022

2022 ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை ஆடிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் கம்பீரமாக முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து லக்னோ அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்துவருகிறது.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று  4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

ipl

பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து டெல்லி அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து  8வது இடத்திலும், மும்பை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து 9வது இடத்திலும், சன்ரைசர்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து 10வது இடத்திலும் உள்ளது.