ப்ளேஆஃப் மற்றும் இறுதிபோட்டியில் அதிரடி மாற்றம்! சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு சோகம்

ப்ளேஆஃப் மற்றும் இறுதிபோட்டியில் அதிரடி மாற்றம்! சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கு சோகம்


IPL Playoff and final time change

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2019 ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளேஆஃப் சுற்றிற்கு மு1னேறியுள்ள நிலையில் பெங்களூரு அணி மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்துள்ளது. 

அடுத்து நடைபெறும் போட்டிகளில் ப்ளேஆஃப் சுற்றிற்கு முன்னேறும் மற்ற இரண்டு அணிகள் யார் என்பது தெரிந்துவிடும். பெரும்பாலும் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

IPL 2019

இந்நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் ப்ளேஆஃப் சுற்று மற்றும் இறுதி போட்டிகளின் ஆரம்ப நேரத்தினை பிசிசிஐ மாற்றி அமைத்துள்ளது. வழக்கமாக இரவு 8 மணிக்கு துவங்குவதற்கு பதிலாக அந்த நான்கு ஆட்டங்கள் மட்டும் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே 7:30 மணிக்கு துவங்கும் என அறிவித்துள்ளது. 

ப்ளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள்:
குவாலிபயர் 1 - மே, 7; சென்னை

எலிமினேட்டர் - மே, 8; விசாகப்பட்டினம்

குவாலிபயர் 2 - மே 10; விசாகப்பட்டினம் 

பைனல் - மே 12; ஹைதராபாத்