இந்தியா விளையாட்டு

ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்த முடிவு.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Summary:

இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த

இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தவருடம் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தநிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வீரர்களின் நலன் கருதி தற்போது ஐபிஎல் போட்டி மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்தி வரும் பிசிசிஐ ஐபிஎல் தொடர் இந்தாண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி குறித்து என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நேற்று நடந்தது. 

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில் வருங்கால போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

இதன் மூலம் 2-வது முறையாக தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி அமீரகத்தில் நடைபெற உள்ளது. எஞ்சிய ஐ.பி.எல். போட்டிக்கான தேதி எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த போட்டி செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement