CSK Vs SRH: சொந்த மண்ணில் திரில் வெற்றி அடைந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி.. பவுலிங்கில் ஜடேஜா, பேட்டிங்கில் கான்வே அசத்தல்.!

CSK Vs SRH: சொந்த மண்ணில் திரில் வெற்றி அடைந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி.. பவுலிங்கில் ஜடேஜா, பேட்டிங்கில் கான்வே அசத்தல்.!



IPL 2023 CSK Vs SRH CSK Victory Match

 

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் - சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே இன்று பலபரீட்சை நடந்தது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்க சன் ரைசஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. எஸ்.ஆர்.எச் அணி சார்பில் விளையாடிய பலரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. 

சென்னை அணி சார்பில் களமிறங்கிய வீரர்களில் கான்வே இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 57 பந்துகளில் 77 ரன்களை அடித்து அசத்தினார். ஆட்டத்தின் இறுதியில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு, தனது இலக்கை விட 4 ரன்கள் கூடுதலாக அடித்து 138 ரன்கள் அடித்து வெற்றி அடைந்தது. ஆட்டமும் 18.4 ஓவரிலேயே நிறைவு பெற்றது. 

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சென்னை அணியை பொறுத்தமட்டில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆகாஷ், மகேஷ், மாதேஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.