அடுத்தவருட ஐபில் போட்டியில் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..! பிசிசிஐ கையில் வைத்திருக்கும் மெகா பிளான்..

அடுத்தவருட ஐபில் போட்டியில் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..! பிசிசிஐ கையில் வைத்திருக்கும் மெகா பிளான்..


IPL 2021 BCCI plans to add one more team

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபில் போட்டியில் கூடுதலாக ஒரு அணியை சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவந்த ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் நேற்றுடன் முடிவு பெற்றது. இந்த சீசனில் நடப்பு சாம்பியனான மும்பை அணி மீண்டும் வெற்றிபெற்று 5 வது முறையாக ஐபில் கோப்பையை கைப்பற்றியது. முதல் முறையாக இறுதி போட்டிக்குள் வந்த டெல்லி அணி இரண்டாவது இடத்தை கைப்பற்றியது.

கிரிக்கெட் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள ஐபில் போட்டிகள் கொரோனா காலம் என்பதால் இந்த ஆண்டு ஆகிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.

IPL 2021

ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில், அடுத்த ஆண்டு ஐபில் தொடரில் கூடுதலாக ஒரு அணி ஐபில் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குஜராத்தின் அகமதாபாத்தை மையமாக கொண்ட அணியாக அந்த அணி இருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது 8 அணிகள் மட்டுமே ஐபில் போட்டியில் விளையாடிவருநிலையில் அடுத்த ஆண்டு முதல் 9 அணிகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு முழு ஏலம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது...