ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் அணிகள்.! புள்ளி பட்டியல் முழு விவரம்.!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் அணிகள்.! புள்ளி பட்டியல் முழு விவரம்.!



ipl-2020-current-rank

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 29 போட்டிகள் முடிந்துள்ளநிலையில், நேற்று நடந்த 29 வது போட்டியில் சென்னை மற்றும் ஹைத்ராபாத் அணிகள் மோதியதில் சென்னை அணி அபார வெற்றிபெற்றது. 

முதல் சுற்று ஆட்டம் முடிவுபெற இருக்கும் நிலையில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் மும்பை அணி முதல் இடத்திலும், அதே 10 புள்ளிகளுடன் டெல்லி அணி இரண்டாவது இடத்திலும், அதே 10 புள்ளிகளுடன் பெங்களூரு அணி மூன்றாம் இடத்தில் உள்ளது.

ipl rank

இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை ஆடிய 8 போட்டிகளில் தலா 3 போட்டிகளில் வெற்றிபெற்று தலா 6 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் அணி ஐந்தாவது இடத்திலும், சிஎஸ்கே ஆறாவது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று  6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இதுவரை ஆடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.