
IPL 2019 Butlar talks about mankat wicket
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 16 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் கோப்பையை வெல்ல அணைத்து அணிகளும் தங்களது பலத்தை நிரூபித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஐபில் போட்டியில் சர்ச்சையாக பார்க்கப்படும் விஷயம் பஞ்சாப் வீரர் அஸ்வின் பட்லரை அவுட் செய்த விதம்தான்.
மன்கட் முறையில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த பட்லரை அஸ்வின் அவுட் செய்தார். இந்த செயல் அஸ்வினிக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அஸ்வின் செய்த அந்த அவுட் தான் அன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற முக்கிய காரணம் என்றே கூறலாம்.
இந்நிலையில் இந்த அவுட் குறித்து வாய் திறக்காத பட்லர் முதல் முறையாக இது குறித்து பேசியுள்ளார். அந்த நேரத்தில் நான் உண்மையாகவே மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அந்த ஸ்டைலை நான் விரும்பவில்லை. அந்த நேரத்தில் போட்டியை எப்படி ஜெயிப்பது என்று நினைப்பேனா? அல்லது நான் ஸ்டிரைக்கர் முனையில் நிற்பது குறித்து நினைப்பேனா என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
Advertisement
Advertisement