பஞ்சாப் வீரரின் புயல் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாத டெல்லி அணியின் மோசமான சாதனைகள்.!

பஞ்சாப் வீரரின் புயல் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாத டெல்லி அணியின் மோசமான சாதனைகள்.!



ipl-2019-13-leek---kxip-vs-dc---sam-curran-hatric---pun

ஐபிஎல் சீசன் 12 நடைபெற்று வருகிறது. இதற்கு முந்தைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல் சூப்பர் ஓவரில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற 13 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது டெல்லி கேப்பிடல்.

மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வின் செய்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி பஞ்சாப் அணிக்காக களம் இறங்கிய அந்த அணியின் வீரர்கள் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 39 , டேவிட் மில்லர் 43 மந்தீப்  சிங் 29 எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2019

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ப்ரீத்தி ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. ஒருகட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்பு உருவானது.

18வது ஓவரை வீசிய ஷாம் கரண், அந்த ஓவரின் 4வது பந்தில் இங்ராமை அவுட்டாக்கினார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் ஹர்சல் படேலை, கரண் வெளியேற்றினார். தொடர்ந்து 20வது ஓவரை மீண்டும் வீச வந்த கரண் முதல் பந்தில் டெல்லியின் ரபாடாவை போல்டாக்கினார். இதையடுத்து இவருக்கு ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தது.

IPL 2019

ஹாட்ரிக் பந்தை சந்தீப் லாமிசானே எதிர்கொண்டார். இதையும் கரண் அசுர வேகத்தில் யார்க்கராக வீச, லாமிசானே தடுக்க முயன்ற போதும், போல்டானார். இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல்., அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற பெருமை பெற்றார் ஷாம் கரண். 

இதனால் டெல்லி அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை எடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 18வது வீரரானார் ஷாம் கரண். தவிர, ஐபிஎல்.,அரங்கில் ஓப்பனிங் பேட்டிங், பவுலிங் செய்த வீரர்கள் பட்டியலில் ஷாம் கரண் 13வது இடம் பிடித்தார் ஷாம் கரண். 

ஐபிஎல்., அரங்கில் ஒரே இன்னிங்சில் அதிக வீரர்கள் ‘டக்’ அவுட்டான போட்டிகள்: 
6 கொச்சி, எதிர்- டெக்கான், கொச்சி, 2011 
5 பெங்களூரு, எதிர்-பஞ்சாப், பெங்களூரு, 2008 
5 டெல்லி, எதிர்- மும்பை, டெல்லி, 2011 
5 டெல்லி , எதிர்- பஞ்சாப், மொஹாலி, 2019 * 

ஐபிஎல்., அரங்கில் மோசமான 7 விக்கெட் சரிவு 
8/7 டெல்லி v பஞ்சாப், மொஹாலி, 2019 (144/3->152) 
12/7 டெக்கான் v டெல்லி, டர்பன், 2009 (149/3->161) 
17/7 ராஜஸ்தான் v பெங்களூரு, பெங்களூரு, 2010 (75/3->92)