ஜெயிச்சது என்னவோ ராஜஸ்தான் தான் பிளே ஆப் சுற்றில் நுழைந்தது யார் தெரியுமா? ரசிகர்கள் செம உற்சாகம்



ipl 2019 - rr vs srh - won rr - play of round csk

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய ஐபில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. தற்போதைய நிலவரப்படி நடப்பு சாம்பியான சென்னை அணி தரவரிசையில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள டெல்லி அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், கைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிவந்த பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணி தொடர் தோல்வியால் ஐந்து மற்றும் 7வது இடத்தில் உள்ளது.

IPL 2019

நேற்றைய ஐபிஎல் 45வது போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் ராஜஸ்தான் 5 வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

இதன் காரணமாக சென்னை அணி பெற்றுள்ள வெற்றியின் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.