இந்தியா விளையாட்டு

கோடிகளில் புரண்ட உனட்கட்டின் நேற்றைய சம்பவம் தான் தரமானது.!

Summary:

ipl 2019 - rr vs srh - man of the match - unatkat

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 12 வது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வில் இந்திய வீரர் ஜெயதேவ் உனட் கட்டை அதிகபட்சமாக 8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்நிலையில், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 45வது லீக் போட்டியில் ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெடுக்கு 160 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்து ‘ப்ளே ஆப்’ வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. 

இந்த சீசனில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜெயதேவ் உனட்கட் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 26 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மேலும், சிறப்பான தடுப்பு பணியை மேற்கொண்ட அவர் 2 கேட்சுகளை பிடித்தார். இதன் மூலம் 4 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக அமைந்ததால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


Advertisement