சென்னை சாம்பியன் ஆகவே ஆகாது போலயே; சிஎஸ்கேவை கலாய்த்து வைரலாகும் ரசிகர்களின் மீம்ஸ்கள்.!
ஐபிஎல் சீசன் 12 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை, மும்பை, டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு எளிமையாக நுழைந்தது. நான்காவது அணியாக யார் முன்னேறுவது என்று பலபரீட்சை நடந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக கொல்கத்தாவை முந்தி ஹைதராபாத் அணி தகுதி பெற்றது.
இந்நிலையில் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே நேற்று இரவு 7:30 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
நேற்று டாஸ் வின் செய்த தல தோனி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆனால் சிஎஸ்கே அணியின் யாரும் சொல்லிக் கொள்ளும்படி சிறப்பாக ஆடாததால் மும்பை அணிக்கு இலக்காக 132 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி இரண்டாவதாக களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தது சிஎஸ்கே. ஆனால் அதன் பிறகு மும்பை அணி கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்புகளை முரளி விஜய், வாட்சன், டுபிளெஸ்ஸிஸ் ஆகியோர் கோட்டை விட்டதால் மும்பை அணி எளிதாக வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்த சீசனில் மொத்தமாக 15 ஆட்டங்களில் பங்கேற்று 9 வெற்றிகளை பெற்ற சிஎஸ்கே 6 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அதில் மூன்று போட்டிகள் மும்பைக்கு எதிரானதாக அமைந்துள்ளது.
மேலும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 27 முறை மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 16 முறை வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 11 முறை வென்றுள்ளது.
இதனால் இன்று நடக்கும் டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதி வெற்றி பெற்றாலும் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் ரசிகர்கள் சிஎஸ்கே மீது கடும் வெறுப்புடன் உள்ளார்கள். மேலும் சமூகவலைதளங்களில் சிஎஸ்கே அணி மீதான காமெடி மீம்ஸ்களை ரசிகர்கள் வைரலாக்கி கலாய்த்து வருகின்றனர்.
CSK fans waiting for Vijay nd watson to come #MIvCSK pic.twitter.com/Pq28Wg2PZJ
— Chowkidar Pankaj (@PankajD_90) May 7, 2019
@ChennaiIPL Adeii 😹😹😹
— ராக்கெட் ராஜா™ (@KettaPaya_Sir) May 7, 2019
Aahn Varanum 😆#OneFamily #MumbaiIndians #CricketMeriJaan #MIvCSK pic.twitter.com/ddnjZ05hbf