ஐபிஎல் இந்த சீசனில் ஜொலித்த வீரர்கள் யார் யார்? புள்ளி விபரம் இதோ.!

ஐபிஎல் இந்த சீசனில் ஜொலித்த வீரர்கள் யார் யார்? புள்ளி விபரம் இதோ.!


ipl 2019 - man of the awards players list

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கடைசி கட்டத்தை நோக்கி நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை அனைத்து அணிகளும் தலா 12 போட்டிகளில் ஆடியுள்ளது.

இதில் 16 புள்ளிகளுடன் சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளேஆஃப் சுற்றிற்கு தகுதிபெற்றுள்ளன. வெறும் 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றிற்கு செல்லும் தகுதியை இழந்துவிட்டது. 

IPL 2019

இன்னும் மீதமுள்ள போட்டிகளில் ப்ளேஆஃப் சுற்றிற்கு முன்னேர போகும் அடுத்த இரண்டு அணிகள் என்னென்ன என்பதனை தெரிந்துகொள்ளும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கிவிட்டது. முதல் சுற்றில் அனைத்து அணிகளுக்கும் இன்னும் தலா இரண்டு போட்டிகளே உள்ளன. 

இதில் அடுத்து உள்ள மொத்தம் 8 போட்டிகளில் சென்னை vs டெல்லி போட்டியை தவிர மற்ற 7 போட்டிகளும் மிகவும் முக்கியமான போட்டிகள் ஆகும். இதுவரை 48 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இதுவரை எந்த அணிக்காக யார் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என பார்க்கலாம்.

IPL 2019

சென்னை சூப்பர் கிங்ஸ்: 8 ஆட்ட நாயகன் விருதுகள்: 
விருது வென்றவர்கள்: தோனி (2), ஷேன் வாட்சன் (2), ஹர்பஜன் சிங் (2), தீபக் சகார், இம்ரான் தாஹிர்.

டெல்லி கேபிடல்ஸ் : 8 ஆட்ட நாயகன் விருதுகள்: 
விருது வென்றவர்கள்: ஷிகர் தவான் (2), ரிஷப் பண்ட் (2), ஸ்ரேயாஸ் ஐயர், பிர்த்வீ ஷா,  ரபாடா, கிமோ பவுல்,

மும்பை இந்தியன்ஸ்: 7 ஆட்ட நாயகன் விருதுகள்: 
விருது வென்றவர்கள்: ஹர்திக் பாண்டியா (2), ரோகித் சர்மா, கெய்ரான் போலார்டு,  ஜஸ்பிரீத் பும்ரா, அல்ஜாரி ஜோசப், லசித் மலிங்கா,

IPL 2019

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 5 ஆட்ட நாயகன் விருதுகள்: 
விருது வென்றவர்கள்: ஆன்ரே ரசல் (4), ஹாரி குர்னே. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் : 5 ஆட்ட நாயகன் விருதுகள்: 
விருது வென்றவர்கள்: கிறிஸ் கெயில், மாயங்க் அகர்வால், சாம் கரன், கே.எல்.ராகுல், அஷ்வின்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 6 ஆட்ட நாயகன் விருதுகள்: 
விருது வென்றவர்கள்: ஜானி பேர்ஸ்டோவ் (2), டேவிட் வார்னர் (2), ரசித் கான், கலீல் அஹமது.

IPL 2019

ராஜஸ்தான் ராயல்ஸ் : 5 ஆட்ட நாயகன் விருதுகள்: 
விருது வென்றவர்கள்: ஸ்ரேயாஸ் கோபபல், ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், வருண் ஆரோன், ஜெய்தேவ் உனத்கத். 

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: 4 ஆட்ட நாயகன் விருதுகள்: 
விருது வென்றவர்கள்: டிவிலியர்ஸ் (2), விராட் கோலி, பார்த்தீவ் படேல்