அடேங்கப்பா! 2 நிமிடத்திலேயே விற்று தீர்ந்த ஐபிஎல் இறுதிப் போட்டி டிக்கெட்; ரசிகர்கள் ஏமாற்றம்.!

அடேங்கப்பா! 2 நிமிடத்திலேயே விற்று தீர்ந்த ஐபிஎல் இறுதிப் போட்டி டிக்கெட்; ரசிகர்கள் ஏமாற்றம்.!



ipl-2019---final-match---ticket-house-full---2minutes

ஐபிஎல் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகளே மீதமுள்ள நிலையில் எந்த அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போகிறது என்று தெரிந்துவிடும். ப்ளே ஆப் சுற்றுக்கு மும்பை, சென்னை, டெல்லி, ஐதராபாத் அணிகள் தகுதி பெற்றன.

இந்நிலையில், முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளான மும்பை, சென்னை அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்றில் குவாலிபயர்-1 நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சிஎஸ்கேவின் சொந்த மண்ணில் இப்போட்டி நடைபெற்றதால் சென்னை அணி வெற்றி பெறும் என்ற ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்தனர்.

IPL 2019

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இப்போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் பரிதாபமான தோல்வியை தழுவியது. இதனால் குவாலிபயர்-2 போட்டியில் ஆடி வெற்றி பெற்றால்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் வரும் 12ம் தேதி நடக்கும் ஃபைனல் போட்டியில் மும்பை அணி சென்னை அல்லது டெல்லி அணியை எதிர்கொள்ளும். இதற்கான டிக்கெட் விற்பனையை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் பிசிசிஐ துவங்கியது. 

IPL 2019

இந்த டிக்கெட் விற்பனைக்கான உரிமம் இவன்ட்ஸ் நவ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய டிக்கெட் விற்பனை தொடங்கிய இரண்டே நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பொதுவாக ரூ.1000, ரூ.1500, ரூ.2000, ரூ.2500, ரூ.5000, ரூ.10000, ரூ.12500, ரூ.15000 மற்றும் ரூ.22500 விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும். ஆனால் இம்முறை ரூ.1500, ரூ.2000, ரூ.2500 மற்றும் ரூ.5000 விலைகளுக்கான டிக்கெட் விற்பனை மட்டுமே இம்முறை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது.