நேற்று ஓசையே இல்லாமல் சாதனைகள் பல படைத்த சின்ன தல ரெய்னா! என்னென்ன சாதனைகள் தெரியுமா?

நேற்று ஓசையே இல்லாமல் சாதனைகள் பல படைத்த சின்ன தல ரெய்னா! என்னென்ன சாதனைகள் தெரியுமா?



ipl-2019---12th-leek---csk-vs-rr---suresh-raina-new-rec

ஐபிஎல் 12ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 12 வது லீக் போட்டியில்   சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் ரகானே, முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

இதன்படி களமிறங்கிய சென்னை வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதில் ரெய்னா மட்டும் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சற்று ஆதரவளித்தார். ஒரு கட்டத்தில் கேப்டன் தோனி மற்றும் பிராவோ நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக ஆடத் துவங்கிய பிராவோவும் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

IPL 2019

குறிப்பாக ராஜஸ்தான் அணியின் கடைசி ஓவரை வீசிய உனட்கட் ஓவரில் சென்னை அணி சிக்சர் மழை பொழிந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்சர் அடித்து ஒரு ரன் அடித்தார். தொடர்ந்து அந்த ஓவரை சந்தித்த தல தோனி தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

முடிவில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதன்பிறகு ஆடவந்த ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IPL 2019

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, 36 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய மண்ணில் நடந்த டி-20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள் என்ற புது மைல்கல்லை எட்டினார். 

தவிர, இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார் ரெய்னா. இந்நிலையில் மிஸ்டர் ஐபிஎல்., என செல்லமாக அழைக்கப்படும் ரெய்னா, நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது150வது போட்டியில் களமிறங்கினார். 

அதே போல சென்னை சேப்பாக்க மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 50வது போட்டியில் பங்கேற்றது. இதில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் ரெய்னா 50வது போட்டியில் பங்கேற்றார். 

ஐபிஎல்., அரங்கில் அதிக போட்டிகளில் பங்கேற்ற ‘டாப்-5’ வீரர்கள் பட்டியல்: 
சுரேஷ் ரெய்னா - 179 போட்டிகள் (29 போட்டிகள் குஜராத் லயன்ஸ்) 
தோனி - 178 போட்டிகள் 
ரோகித் சர்மா - 176 போட்டிகள் 
தினேஷ் கார்த்திக் - 171 போட்டிகள் 
ராபின் உத்தப்பா - 168 போட்டிகள்