நேற்று தல தோனிக்கு அடித்த அதிர்ஷ்டம்; நல்ல வேள அவுட் கொடுக்கல இல்லனா ஆட்டமே மாறி இருக்கும்.!

நேற்று தல தோனிக்கு அடித்த அதிர்ஷ்டம்; நல்ல வேள அவுட் கொடுக்கல இல்லனா ஆட்டமே மாறி இருக்கும்.!



ipl-2019---12th-leek---csk-vs-rr---dhoni-bold-but-not-o

ஐபிஎல் 12ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 12 வது லீக் போட்டியில்   சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் ரகானே, முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

இதன்படி களமிறங்கிய சென்னை வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவாக ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதில் ரெய்னா மட்டும் 32 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சற்று ஆதரவளித்தார். ஒரு கட்டத்தில் கேப்டன் தோனி மற்றும் பிராவோ நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக ஆடத் துவங்கிய பிராவோவும் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

குறிப்பாக ராஜஸ்தான் அணியின் கடைசி ஓவரை வீசிய உனட்கட் ஓவரில் சென்னை அணி சிக்சர் மழை பொழிந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்சர் அடித்து ஒரு ரன் அடித்தார். தொடர்ந்து அந்தப் ஓவரை சந்தித்த தல தோனி தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

46 பந்துகளை சந்தித்த தோனி 75 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். முடிவில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது.

அதன்பிறகு ஆடவந்த ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் என்ன ஒரு சிறப்பு என்றால் தோனி சந்தித்த இரண்டாவது பந்தில் பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது. ஆனால் மேலிருந்த பைல்ஸ் கீழே விழாததால் தோனி அவுட்டாகாமல் தப்பித்தார். அந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் வீசினார். தோனிக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பயன்படுத்தி அதன் பிறகுதான் சிக்சர் மழை பொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.