மிரட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்: மிரண்டு சுருண்ட ஜிம்பாவே!.. வெற்றியை நோக்கி இந்தியா..!

மிரட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்: மிரண்டு சுருண்ட ஜிம்பாவே!.. வெற்றியை நோக்கி இந்தியா..!



Intimidating Indian fast bowlers, it was Zimbabwe who were intimidating

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் இன்னிங்ஸை இன்னோசன்ட் கையா-டெடிவானாஷே ஜோடி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் முறையே 4 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், நடு வரிசை பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 16.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், 6 வது வரிசையில் களமிறங்கிய அந்த அணியின் விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா அதிகபட்சமாக  35 ரன்களும், 10 ஆம் நிலை வீரராக களமிறங்கிய ரிச்சர்டு என்கிராவா 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து க189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பின்பு ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.