கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடுத்தடுத்து கைவிடப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடுத்தடுத்து கைவிடப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்!


International cricket matches postponed outbreak of covid-19

சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் இதுவரை பலியாகியுள்ளன. உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொல்லை நோயை குணப்படுத்துவதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

எனவே தற்போது இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதே இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட துவங்கிவிட்டனர். பெரும்பாலான நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

COVID-19

அதே சமயத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சர்வதேச அளவில் நடைபெறுவதாக இருந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் முற்றிலும் கைவிடப்பட்டது. இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணம், பங்களாதேஷில் நடைபெறுவதாக இருந்த உலக லெவன் vs ஆசிய லெவன் தொடர், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர்கள் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.