பயம் காட்டிய வெஸ்ட்இண்டீஸ்.. இந்தியா சொதப்பலான பந்துவீச்சு.. போராடிய இந்தியா திரில் வெற்றி..!

பயம் காட்டிய வெஸ்ட்இண்டீஸ்.. இந்தியா சொதப்பலான பந்துவீச்சு.. போராடிய இந்தியா திரில் வெற்றி..!


Indian won by 3 runs in first odi

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. தவான் அதிகபட்சமாக 97 ரன்கள், கில் 64, ஸ்ரேயஸ் ஐயர் 54 ரன்கள் எடுத்தனர்.

ind vs WI

309 என்ற கடினமான இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. 5-வது ஓவரில் சாய் ஹோப் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ப்ரூக்ஸ் மற்றும் மேயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரூக்ஸ் (46) விக்கெட்டை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். 

மேலும் தான் வீசிய அடுத்த ஓவரிலேயே 75 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிய மேயர்ஸ் விக்கெட்டையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய பிராண்டன் கிங் மற்றும் கேப்டன் பூரன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 54 மற்றும் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க ரோமன் பவலும் 6 ரன்னில் வெளியேறினார்.  ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்திருந்தது.

ind vs WI

கடைசி 5 ஓவரில் 54 ரன்கள் தேவை என்ற இலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகில் ஹூசைன், ரொமாரியோ ஷெப்பர்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் போராடி 11 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்நிலையில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.