இந்தியா விளையாட்டு

ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய அணி! கண்ணிமைக்கும் நேரத்தில் ஆஸ்திரேலியாவை ஊதி தள்ளி தரமான சம்பவம்.! வைரல் வீடியோ

Summary:

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி அரையி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்றில் முதன் முறையாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. 

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இதில் 11வது நாளான இன்று நடந்த பெண்கள் ஹாக்கி போட்டி காலிறுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதின.

போட்டியின் 22வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை குர்ஜித் கவுர்  கோலாக மாற்றி இந்தியாவின் வெற்றிக்கு உதவியுள்ளார். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலைப்பெற்றது. இறுதிவரை போராடிய ஆஸ்திரேலிய வீராங்கனைகளால் கோல் ஏதும் போட முடியவில்லை.

இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது. இந்தநிலையில் புதன்கிழமை நடைபெறவிருக்கும் முதல் அரையிறுதியில் ஜேர்மனியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினாவுடன் இந்திய அணி மோதுகிறது.


Advertisement